புதுக்கோட்டையில் இவ்வாறு பேசினார் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்...?

கச்சத்தீவில் இந்தா இலங்கை இணைந்து தொழில் மையம் தொடங்க திட்டமிட்டுள்ளது. கச்சத்தீவை இந்தியா கேட்டு பெறும் பட்சத்தில், இந்தியாவின் அனுபவத்தில் உள்ள இலங்கையின் ஆழ்கடல் பகுதியை இந்தியா இழக்க நேரிடும்....

ஆழ்கடல் பகுதியை இந்தியா எவ்வாறு இழக்க நேரிடும்...?

இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர்களின் வாழ்நிலை நன்றாக இருக்கும்.

அப்படியெனில், இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை சீரும் சிறப்புமாக தொடங்கி வைத்து, மகிந்தா மீது உள்ள போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு போன்றவைகள் எல்லாம் கருப்பு போர்வையால் போர்த்தி கடலில் எரிந்து விடுவார்கள்....?.

இலங்கையில் தமிழர்கள் கஷ்டப்படவில்லை. நன்றாகவே வாழ்கிறார்கள், அதேபோல தமிழக மீனவர்கள் மீது கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை என்றார், அப்போது குறுக்கிட்ட பத்திரிக்கையாளர்கள், கடந்த ஆண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது, தொடர் தாக்குதல்களும் நடந்து கொண்டிருக்கிறதே என்றனர். அதற்கும் பதில் சொன்னார் இவ்வாறு,

கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த மாதிரி சம்பவம் நடக்கவில்லை, அப்படி நடந்திருந்தால் எப்.ஐ.ஆர். - ஐ காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இலங்கை கடற்படை மீது எப்.ஐ.ஆர்.எப்படி போட முடியும் என்று இருக்குமோ...?

மேலும், இலங்கை இந்தியா பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டது...அதேபோல பாகிஸ்தான் கேட்டாலும் யோசிப்போம் என்றார்...

ஆக, தமிழர்கள், தமிழ் மீனவர்கள் முக்கியமல்ல...
இலங்கையும் சீனாவும் பாகிஸ்தானும் தான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்....அதாவது காங்கிரஸ் கட்சியும் பாஜகவும்.... இவர்களுடன் சதா மட்டை அடித்துக் கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும்.....கூட சேர்த்துக் கொண்டு....?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (11-Sep-13, 4:58 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 68

மேலே