துயிலுறையும் மொட்டினம் .......!

எக்கணம் உறைந்தாயோ
ஆதவனே நெஞ்சத்துள்
இக்கணம் இடைமெலிந்தாள்
பூரணப் பௌர்ணமியாள்

சித்தம் கல்லாக்கும்
கமண்டல முனியோ – உன்
சடைமுடிக்குள் ஒளிந்திருப்பது
பித்தம் கல்லாக்கும் சூதோ

கட்டங்கள் பனிரெண்டும்
சுயமிழந்து சுற்றவில்லை
பிரம்ம தூதனே ! – சோழியாட்டம்
காதலை ஏணியேற்றிவிடவோ ??!!

நித்திரை செய்யலாகாது
சித்திரையல்லவே அதனினும்
அனலாய்ச் சுருட்டிக்கொண்ட
பசலை நோயுற்றனளானேன்

வைகறைச் சுவையறியா
பூவினம் உண்டோ – இங்கோ
பைந்தமிழ் மொட்டொன்று
துயிலுறைவினின்று மலரவில்லை

அருந்ததி அம்மையவள்
ஆசிதர யோசித்தனள்
அவ்வண்ணமே வரமெனவாய்
அவளுடையானைப் பூசித்தனள்

கானகத்தே பொய்மான் தேட
கன்னியிவள் கட்டளையில்லை
பெண்ணகத்தே மெய்யோன் கூட
திணையொன்று வேண்டினள்

சிற்பிக்குள் முத்துக்குளிக்கும்
ஆழிநீரலையே – கரைகாண்
தழுவலுக்காய் காத்திருக்க
மணற்ச் சிற்பமாகினள்

செவ்வாய் தாழ்திற - இருபாதித்
திருக்கோலமாவோமே !
எவ்வாயும் வாழ்த்தும் பிராணனனே ;
கண்மணியாள் கலக்கமுடன் !!!!!!!

எழுதியவர் : புலமி (12-Sep-13, 3:17 am)
பார்வை : 99

மேலே