அந்த ஒரு நாள் வருமா????????

எதையும் கொடுக்க வேண்டியதில்லை ....
எதையும் பெறத் தேவை இல்லை...
வேறு எதவும் செய்யத் தேவைஇல்லை ...
உன் அன்பான சொற்கள் போதும் நண்பா..
இந்த ஜகத்தையே நான் வசப்படுத்த.. ..

நீ என்னுடன் பேசாமல்
இருக்கும் தருணங்களில்
நூறு உறவுகள் என்னை சுற்றி
இருந்தாலும் நான் தேடுவது
தனிமையை தான் நண்பா..

பழகிய நீ பிரிந்து செல்லும்போது கூட
வலிக்கவில்லை ..
பழக்கம் இல்லாதவன் போல்
நடந்துகொள்ளும் பொதுதான்
அதிகம் வலிக்கின்றது..

பாசம் வைத்த என் இதயம்
பாவப்பட்டது ....
மறக்க நினைக்கும் போதெல்லாம்...
அதிகம் நினைக்கின்றது...
அதிகம் துடிக்கிறது
அதிகம் வலிக்கிறது ....

மூச்சு நின்றால் மட்டும்
அது மரணம் ஆகாது நண்பா
உன்னை போல்
சில அன்பான இதயங்களின்
பேச்சு நின்றால் கூட அது
மரணம் தான்....
உன் பேச்சு நின்ற கனமே
என் மூச்சு நின்றது நண்பா....

மறக்கப்படும் அன்பும்
மறுக்கப்படும் அன்பும்
மரணத்தை விட கொடுமையானது நண்பா..
அன்பு சிலருக்கு காட்டத் தெரியாது
சிலருக்கு காட்டுவது தெரியாது...
உனக்கோ காட்டுவது புரியாது...
அன்பு என் வார்த்தைகளில்
மட்டும் அல்ல நண்பா
என் உயிரிலும் கூடத்தான்
புரிந்துக்கொள்...

நண்பா நீ பிரிவை நேசிக்கின்றாயா?
அல்லது
பிரியத்தான் நேசித்தாயா ???

இதழ்கள் உதிரும் என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்
நீ மறப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் நண்பா
உன் நினைவுகளை...

பார் உன்னை நினைத்து நினைத்து
ஒரு நாள் துடிப்பதையே மறந்து
விடபோகிறது என் இதயம்...

விழியோரம் கசியும்
கண்ணீர் துளிகள்
உறவுகளை மட்டும் அல்ல
உள்ளதையும் ஒரு நொடி
மௌனம் ஆக்குகிறது
நண்பா.....

கண்ணீர் விடுவதை நான்
இன்று அடியோடு
நிறுத்தி விட்டேன்
விலைமதிக்கமுடியா கண்ணீரை
இங்கு வீணாண உறவுகளுக்காய்
வீண் விரயம் செய்திட
விருப்பமில்லை நண்பா..

ஒரு நாள் நீ நானாக வேண்டும்
நான்
நீயாக வேண்டும்
அன்று உனக்கு புரியும்
என் மனம் படும் வேதனை..

காத்திரு என்றோ ஒருநாள்
நான் மீண்டும்
வருவேன் என்கிறாய்
அந்த ஒரு நாள் வருமா???

காத்திருக்கிறேன்
என்றோ ஒரு நாள் வருவாய்
நிச்சயம் வருவாய்
என்னை புரிந்து கொள்வாய்
உன் திறந்த கண்களோடு
என் மூடிய கண்களை பார்ப்பாய்....

பிரிவை தாங்காத இதயங்களே
உறவை வளர்காதீர்கள்
உறவை வளர்த்து விட்டால்
கடைசிவரை பிரிய நினைக்காதீர்கள்........

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (13-Sep-13, 7:07 am)
பார்வை : 982

மேலே