நானும் ஒரு விபச்சாரி

காலம் என்னும் கோலம்தனில்
காதலென்னும் மோகத்தினால்
கட்டுப்பட்ட என் மனம் - என்னையே
காமத்தில் முழுகிவிட்டது
கற்பெனும் சொல்லை
கட்டேரிந்துவிட்டு விட்டு
கல்யாணம் முன் உன்மீதுள்ள
காதலால் உன்னுடன் காமத்தில்
கலந்த என்னை
மோகம் முடிந்தபினேயும்
மொட்டுவிட்ட உன் நினைவை
முழுசாக மறப்பதற்குள் உன்
மோகபிடியில் இருந்து
விடுபட்டேன் என்செய்வேன்
கற்பென்ற ஒன்றை இழந்துவிட்ட
என்னை அற்பென்று
தூக்கி எறிந்துவிட்டு போனதேனோ
விட்டேரிந்த உன்நினைவை
மறப்பதற்க்குள் மகிழ்ச்சியாய்-எந்தன் வீட்டார்
மாப்பிளை பார்த்து விட்டார்
மறுப்பதற்கு மனமில்லை என்னை பற்றி
சொல்வதற்கு வழியில்லாமல்
சட்டேறு சொன்னேன் எந்தன்
சம்மதமான எண்ணத்தை
சொன்னது தான் தாமதம் -திருமணம்
முடிந்தபினே முழுசான விருப்பம்
இன்றி விபசாரி போல
இன்றும் வலியுடன் வாழுகிறேன்

எழுதியவர் : அருண் (13-Sep-13, 9:17 am)
பார்வை : 148

மேலே