வெஹு நாட்களுக்கு பின்
எனக்குள் இருந்த கவிச்சனுக்கு
இத்தனை நாள் என்னதான் ஆயிற்று?
அவன் இருந்தானா இல்லை இறந்தானா ?
பின்னிரவில் அடர்ந்த இருளில்
வழி மாறிச் செல்கிறது நிலவு
காற்று மடல்கள் அதிர்ந்து அடங்குகையில்
எங்கிருந்தோ கேட்கிறது உன் மெல்லிய குரல்
நிசப்தம் நிறைந்த மணல் வெளியில்
வார்த்தைகள் உடைந்து நெருக்குகின்றன
பேசும் பகிரவுமாய் காத்திருக்கிறது
நம் கனத்த இதயங்கள்
நழுவி விழ்ந்த நிலஒளியின் கீற்றுக்கள்
நாளை ஒரு பொழுதில்
நம் விரல்களின் இடையே வந்தமர்ந்து
மனதைக் கோதி விடும்
காத்திருப்போம் இந்தப் பாலை மண்
எம் வாழ்வில் வசந்தத்தை வீசுமா ?
தனித்து பேசஉம் கலந்து
பகிரவும் கனவுகளா இல்லை நம்மிடம்.