கூடலின்ப அந்தாதி-கேஎஸ்கலை

-------------(வயது வந்தோருக்கு மட்டும்)-------------
நீலக்கடல் தடாகத்தில் நீராடும்
-நிலாப்பாவை
நிலாப்பாவை மேனிசிந்தும் அழகினிலே
-மனம்ஆடும்
மனம்ஆடும் நேரமதில் பக்கம்வந்தாள்
-மங்கையவள்
மங்கையவள் பக்கம்வர நெஞ்சினிலே
-தேனூறும்!
தேனூறும் இதழுடையாள் நயனங்கள்
-கள்வடிக்கும்
கள்வடிக்கும் கண்கண்டு மனம்கடிக்கும்
-கற்கண்டு
கற்கண்டு உண்டமனம் கவிபாடும்
-சொற்கொண்டு
சொற்கொண்டு கவிபாடி அடிவைப்போம்
-சுவர்க்கத்தில்!
சுவர்க்கத்தில் அடிவைக்க மனம்வீழும்
-மயக்கத்தில்
மயக்கத்தில் சிற்றிடையாள் பற்றிடுவாள்
-தோளோடு
தோளோடு அவளுரச துளிர்த்துஎழும்
-தளிர்நரம்பு
தளிர்நரம்பு நடனமிட தகனமாகும்
-முழுவுடம்பும்!
முழுவுடம்பும் தீயுண்டு மோகத்தில்
-சிந்துபாடும்
சிந்துபாடும் அவ்வேளை மேனிசூழும்
-நீரலைகள்
நீரலைகள் வழிந்தோட விளையாடும்
-ஈர்க்கரங்கள்
ஈர்க்கரங்கள் லயித்திருக்க இணைச்சேரும்
-அதரங்கள்!
அதரங்கள் இடம்மாறி தித்திப்பில்
-தடுமாறும்
தடுமாறும் அப்பொழுதில் நாற்கால்கள்
-பின்னலிடும்
பின்னலிடும் காலிடையே மோகத்தீ
-வண்ணமிடும்
வண்ணமிடும் நேரமதில் வாலிபத்தின்
-பசிக்கூடும்!
பசிக்கூடும் மெய்யிரண்டும் முனைப்போடு
-இரைத்தேடும்
இரைத்தேடும் வேளையதில் மெல்லிடையாள்
-இசைச்சேரும்
இசைச்சேரும் இராப்பொழுதில் நரம்புகளும்
-முறுக்கேறும்
முறுக்கேறும் அத்தருணம் முனகல்மட்டும்
-மொழியாகும்!
மொழியாகும் முனகலுடன் சுவாசக்காற்று
-சூடேறும்
சூடேறும் அக்கணத்தில் தொலைந்தோடும்
-நாணமது
நாணமது இழந்தமேனி நர்த்தனமிடும்
-பஞ்சணையில்
பஞ்சணையில் அவ்வேளை உடல்கழுவும்
-அதரங்கள்!
அதரங்கள் தேன்பொழிய கரமிரண்டு
-தடையுடைக்கும்
தடையுடைக்கும் கரமங்கு துச்சாதன
-லீலைசெய்யும்
லீலைசெய்யும் போதினிலே ஈருடலும்
-மழலையாகும்
மழலையாகும் போதங்கு மெழுகொளியோ
-கண்மூடும்!
கண்மூடும் மெழுகங்கு பரிசளிக்கும்
-காரிருளை
காரிருளை போர்த்திகொண்டு காயங்கள்
-விளையாடும்
விளையாடும் உடலிரண்டும் தம்மிடையே
-தோற்றுப்போகும்
தோற்றுப்போகும் வேளையதில் தாலாட்டும்
-நீலக்கடல்!