என் நந்தவனமே

நான்காண்டு இந்த
கல்லூரி நந்தவனத்தில்
மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம் .

கவலை மறந்து
இனிய நினைவுகளுடன்
பறவை கூட்டங்களாய் சிரித்திருந்தோம் .

இன்று இந்த நொடி
பிரிய போகிறோம் .

மனதில் பறவைகளின் கூச்சல்களும்
சிறிது வேதனை அம்புகளும்

காத்திருகிறது ஒரு பெரிய வானம்
கலங்காமல் பறக்க தொடங்கு .

உன்னுடன் கல்லூரி கூடு
இல்லாவிட்டாலும்
நண்பர்களாகிய
கூட்டு பறவைகள் துணை நிற்கும் .

எழுதியவர் : உமா நிலா (16-Sep-13, 6:19 pm)
Tanglish : en nandavaname
பார்வை : 93

மேலே