எம் கவிதைகள்

குழந்தைகள் நடை வண்டி
பழகுவது போல்
எம் எழுத்துக்களும்
தத்தித் தத்தியே...!

என் பின்னே துணை யாய்
கற்றுத் தருகின்றது
எழுத்து நண்பர்களோடு
வாழ்க்கை இனிப்பதற்கு...!

கனவுகளாகிப் போகின்றது
எம் எழுத்துக்களின் வரிசை
புற்றுக்களைத் தேடும் எறும்புகளை போல்
முற்றுப் புள்ளிகளைத் தேடியே...!

எந்தவித கவர்ச்சியும்
அந்தரங்கமும் இல்லாத
முற்றும் தொடரும் இல்லாத
எழுத்துக்கள் இனிப்பதற்கே....!

தொடரும் எண்ணங்கள் கற்பனைகள்
புனித வாழ்க்கை இனிக்கவே
இயல்பாகவே அமைதியாகவே
அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ள கடைசி
மெழுகுச் சிலைபோல்...!

எழுதியவர் : தயா (16-Sep-13, 10:32 pm)
Tanglish : yem kavidaigal
பார்வை : 98

மேலே