காத்திருந்த கண்கள்

ஊர் கூடிப் பொங்க
வைத்தேன் மனதார
எவுகளையும் காணலே...!

தனித்தனியே பொங்க
வைத்தேன் நெஞ்சார
எவுகளையும் காணலே..!

குடங் குடமாய்
தண்ணீர் இறைச்சேன்
தாகம் தீர்க்க
எவுகளையும் காணலே...!

வாரச் சந்தையில
மண் பானை வாங்கிவந்தே ..ன்
மீனு கொழம்பு ஆக்கிப் புட்டேன்
எவுகளையும் காணலே...!

தென்னமரத்துல கொத்து கொத்தா
இளநீ பறிச்சு வெட்டி வச்சேன்
குளிச்சித் தீர்க்க
எவுகளையும் காணலே..!

காத்து காத்து நின்னேன்
மண்டப வாசலும் சிரிச்சிட்டே
என் கண்ணப் பார்த்து சொன்னது ...
''ஏண்டியம்மா நிக்கிறே ?''
உனக்கான மணவாளன்
தேரேறி வந்து ன்னை
மணமுடிப்பான்
உன் தங்கமனசு காரன்
உன் தங்க மனசு போல ...!

எழுதியவர் : தயா (16-Sep-13, 11:01 pm)
பார்வை : 923

மேலே