வலிகளின் பிரசவம் (ஹைக்கூ)
இறங்கி விட்டிருந்தது மடி பாரம்.
கண்திறந்ததும் அதிகரித்துவிட்டது சுமை.
பிரசவத்தில் அடுத்ததும் பெண் குழந்தை!
வாசலில் பாலுக்கழும் பிச்சைக்காரிக் குழந்தை.
வீட்டுக்குள் மார்பு சுரப்பின் தவிப்பு.
பிரசவத்தில் குழந்தையை இழந்த தாய்!
அவளுக்கு சுகப்பிரசவம்.
வருத்தத்தில் ஆஸ்பத்திரி உயர்பீடம்.
கை நழுவிப்போன சத்திர சிகிச்சைக் கட்டணம்!
கருவைக் களைக்காத கன்னிப்பெண்.
பிரசவித்துவிட்டால் அழகிய குழந்தை.
பெயர் வைத்தாள் புதுக்கவிதை!