தேர்தல்காலம் .

மொட்டை தலைக்கும் முழங்காலிற்கும்
முடிச்சுப்போடும்
மூடர்களும் .
ஓடுகின்ற மாட்டில்
இறைச்சி உண்ணும்
ஓநாய்களும் .
ஓசியில் வயிறு வளர்ர்த்து
ஏவுரை விடும்
காக்காய்களும் .
வீர வசனம் பேசும்
தேங்காய்ப்பூ
சண்டியர்களும் .
உங்கள் வீடு தேடிவரும்
காலம் இது ...
என் சமுகமே
தூங்கியது போதும்
விழித்தெழு !
பசுத்தோல் போர்த்திய
புலிகளின்
பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விட்டால்
அரசியலில்
அபிலாசைகளை மட்டுமல்ல
அப்பத் துண்டுகளை கூட
பெறமுடியாது நம்மால் .