உருவாகும் புதுப் பெயர்கள்.

மிருகன்,
அவமானன்,
சபலன்,
பலாத்காரன்,
வல்லுறவன் ,
மானபங்கஸ்தன்,
நிர்வாணன்,
நிர்மூலகன்,
காமுகவாணன்,
கொடூரன்,..
இது நாளைய
இணையத்தில்
இன்றைய எமது
சமுதாயம் தேடப்போகும்
புதியப் பெயர்களின்
அறிமுகம் மட்டுமே.

பாலியல் குற்றமெனும்
பாலில் குளிக்கின்ற
பூனைகளைக் காப்பாற்ற
சட்டமென்ற எலிகளே
சாட்சி சொல்லும்
அவலங்கள்
திட்டமிட்டு தொடர்கின்ற
திமிரடங்கிப் போகாவரை
இன்னும் பல பெயர்கள்
இதுபோலே உருவாகும்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (19-Sep-13, 2:34 am)
பார்வை : 97

மேலே