புனைப் பெயர் இரகசியம்.

அண்ணா நீயெனக்கு சொல்லித் தருவாயா
பொன்னான கவிதை எழுதும் வித்தையதை
பெண்ணாய் நீயென்னைப் பிரித்துப் பாராமல்
சொன்னால் போதும் நானே எழுதிடுவேன்.

பழுது இல்லாத பெயர் இடை வினை உரி
சொற்களை மலரெனவே தொடுத்திட்டு நீயும்
அணியது செய்யும் அலங்களைக் கொண்டு
தமிழ்தாள் பணிந்திடவே கிட்டும் கவிதை.

திங்களையும் அதுதோன்றும் வான் மண்டலமும்
சங்கமிக்கும் ஈருள்ளக் காதல் உணர்வும்
புங்கவராய் பிறரியற்றும் படைப்பைத் திருடாது
நங்கையே நீபடைத்தால் மங்கலம் பெருகும்.

அண்ணனவன் தானுரைத்த அறிவுரைகள் ஏற்று
புண்ணியம் பொருந்தியவள் புதிதாய் படைத்தாள்
பெண்ணவளின் பெயரினிலே புதுக் கவிதைகள்
அண்ணனவன் தான் எழுதி வெளியிடாதவை.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ். (20-Sep-13, 3:00 pm)
பார்வை : 98

மேலே