தாய்மை
![](https://eluthu.com/images/loading.gif)
பகிர்ந்துண்டு வாழும் உயிர்கள் மத்தியில்
தன்னுள் தான் உண்டதை பகிர்ந்து கொடுக்கும்
மகத்துவமே தாய்மை.
ரத்ததை உணவாக்கும் மகிமை
தாய்மைக்கு மட்டுமே.
ராமரோ,ராவனனோ..
காந்தியோ,ஹிட்லெரோ...
அனைவரும் தன் தாயின் ரத்ததை உறீண்சியவர்களே
நல்லவனாய் வாழும் போது அந்த குருதி உணவாகிறது.
தீயவனாய் திகழும் போது அவன் தண்டித்த
முதல் உயிர் தன் தாயகிராள்.