சட்டம்...........
நாளேட்டில்
நான்கு பக்கம் விளம்பரம்
நலத்திட்டம் வழங்கிட -மக்கள்
நல அமைச்சர் வருகை .
வானுயர உருவப்பதாகைகள்
வட்டமும் ,நகரமும்
வள்ளலாய் உபயம்
வரும் அமைச்சரின் நன்மதிப்பைப் பெற
பக்கம் , பக்கமாய் நாளேட்டு விளம்பரம்
வீதி, வீதியாய் ஆட்டோக்கள் விளம்பரம்
கிளை, கிளையாய் தொண்டர்கள் விளம்பரம்
குடும்பம், குடும்பமாய் வந்து சேர்ந்தது கூட்டம்
ஆறு மணிக்கு மேலும் அமர்ந்து, அமர்ந்து
அலுத்து போனது- அந்த கூட்டத்திற்கு
ஆதலால்...
அளவற்றே கனத்து போனது டீ கேன் காரனுக்கு
அமைச்சரையும் சேர்த்து
அறுபது பேருக்கு...
அய்யப்ப செட்டியார் தலைமையில்
அசைவம்/சைவம் தயாரிப்பு
அணியணியாய் கார்கள்
வரிவரியாய் வெண்ணிற ஆடைகள்
கோடியில் செலவு
குதூகல விழாவிற்கு
ஐந்து கோடியே இருபது லட்சத்தில்
மயான பாதை அமைக்கப்படும்
எண்பது லட்சம் ரூபாய் செலவில்
தகன மண்டபம் அமைக்கப்படும்
நலத்திட்டங்கள் அறிவித்த கையோடு
நான்கு சக்கர வாகனம் மட்டும்
நானூரு புறப்பட்டது- இவை அத்துனையும்
நான்கு தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு
ஒரு அமைச்சரின்
மாதந்திர பெட்ரோல் படி
இருபது ஆயிரம் மட்டும்
இது தான் இன்றளவும் சட்டம்.