உன்வசம்

உலறிய வார்த்தைகள்
உன்னோடு மட்டுமிருக்க
உள்ளம் உணர்வின்றி
என்வசம் இருக்க
உயிர் படும்பாடு
விவரிக்க மொழியில்லை
உன்னை பிரியும்
தைரியம் எனக்கில்லை
உள்ளவரையில் வலி
ஒன்றும் பெரிதில்லை
உன்கரம் பிடிக்கும்வரை
உறக்கத்திற்கு வேலையில்லை
உறுதியோடு முயல்கிறேன்
உன்வசம் நானடையும் வரை !!!!!!!!!!!