துப்பாதீர் பொது இடங்களில்

பரிணாம வளர்ச்சி பல்துறையில் இன்று
பரிதாப நிலையோ பலஇடங்கள் இன்றும் !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு இன்று
வியத்தகு அஞ்ஞானம் வீதிகளில் இன்றும் !

சுற்றிலும் நம்மை சுத்தமாய் வைத்திட
சுயமாக நினைப்பவர் பூமியில் உள்ளோர்
அதிகமாக இல்லை அகிலத்தில் என்பதால்
அறிவுறுத்த காரணம் கவிதையாய் இங்கு !

காற்றிலும் தூசு அருந்தும் நீரிலும் மாசு
கடலிலும் மாசு கங்கையிலும் தூசு !
தூய்மை இடத்திலும் நாக்கை சுழற்றி
துப்பிடும் எச்சிலால் பரவிடும் மாசு !

நினைப்பதில்லை விளையும் தீமையை
உரைப்பதில்லை உலவிடும் சிலருக்கு !
வெள்ளை சுவற்றையும் மாற்றிடுவர்
வண்ண மயமாக்குவர் மதியற்றோர் !

திரும்பிப் பார்க்காமலே துப்பிடுவர்
அருகில் வருபவன் அழுக்காவான் !
அடுத்தவர் பற்றி கவலையில்லை
அசுத்தம் செய்வது கைவந்தகலை !

பொது இடங்களில் துப்பும் அறிவிலிகள்
ஆறறிவு இல்லாத ஐந்தாம் படைகள் !
சொல்லியும் திருந்திடா திருந்தாதவர்
எல்லாம் இருந்தும் இல்லாத இதயங்கள் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (22-Sep-13, 6:59 am)
பார்வை : 235

மேலே