என் தந்தை

நான் எட்டி மிதித்த போதும்
சந்தோசம் கொண்ட ஒரே உள்ளம்...

என்னை தன் முதுகில் அமர வைத்து
தன்னை விட என் மகன் உயர்ந்தவன்
என பெறுமை கொண்ட உள்ளம்....

நான் பள்ளிக்கு செல்ல‌
தன் வாழ்வில் ..........
முற்கள் கண்ட உள்ளம்.....

நான் ஏசி ரூமில் இங்கு இருக்க‌
இன்று வெயில்,குளிர் என் பாராமல்
பாடு பட்டு கொண்டு
இருக்கும் உள்ளம்.......

வேர்வையில் தான் குளிக்கும் போது
இரு வேர்வை துளி என் மீது கண்டால்
பதரிபோய் துண்டை எடுத்து ..........
துடைத்த உள்ளம்...

உன் பாதம் சுட்டு விடும் என்று
தன் பாதம் மீது என்னை
ஏற்றிய உள்ளம்...

எனக்கு சிறிதான் காயம் தான
பதறி விட்டார், ஆனால்

தனக்கு தீ காயமே ஆனாலும்
மகனுக்கு தெரிந்தால்
வருத்த படுவான் என
மறைத்த உள்ளம்........

உன் வீரத்துக்கு முன்னால்
நான் ஒரு கோழை........

உன் அன்புக்கு பதில் அன்பு
கொடுக்க முடியாத ஏழை நான்.....

உன் பிள்ளை பாசத்தை
என்றும் என் தந்தை பாசம்
தோற்க்கடித்து விட முடியாது....

உன் கைகள் காப்புக்காய்த்து
இருப்பது எனக்காக
என எண்ணும் போது

உன் கண்ணீரை இது வரை
துடைக்காமல் இருந்தேன்
என எண்ணும் போது.......

என் கண்களின் ஓரம் கண்ணீர்
வருகிறது என் தந்தையே............

தகப்பன் பாசத்திற்கு வணங்குகிறேன்

எழுதியவர் : (22-Sep-13, 2:49 pm)
Tanglish : en thanthai
பார்வை : 103

மேலே