முதுமை தவிப்பு
எங்கிருந்தோ வளம் வந்தால்
என் மனைவியாக...
அதட்டி பேசியதுண்டு பலமுறை
அடித்ததுண்டு இருமுறை ....
ஒருமுறை கூட கேட்கவில்லை
அவள் என்னை அடிக்க நீர் யார் என்று.....
இரவில் வெளிச்சம் அன்று கயற்று கட்டின் மேலே
ஆனந்தம் கண்டோம் நிலவை ரசித்த படி....
அழகாய் என் செல்லம்
மடியினில் என்னை சுமந்தபடி
நோயுற்றாய் இறைவனிடம் வரம் கேட்டு
எனக்கு முன்பே நீ செல்ல...
உன்னை நான் அறிவேன்
எனக்கு முன்பே
நீ சென்று கம்பளம் விரிக்க
புறப்பட்ட காரணம் ஏனோ ....
தனிமையின் கொடுமை அறிந்தேன் இன்று
நம் நினைவை மட்டும் எண்ணிய பொது ...
என்னை நான் அறிந்தேன் இன்று
நம் செல்லத்தை அதட்டியபோது
கேட்டது ஒரு கேள்வி
என்னை அடிக்க நீ யார் என்று ....!