ஒரு விரலாய்...மறு குரலாய் இருப்பாயடா .......(தொடர் பாக்கள் - 4) அகன்

தோழர் தேற்று. உழைப்பாளி போற்று நாளும்
ஏழைக்கிரங்கு. ஏற்றமவர்க்கு காட்டு. வாழ்வு இதுவே காண்

நீச்சல் நிதமும் கைக்கொள். நெடுதுயில் குறை
கூச்சல் இசை வெறு. குதூகல மெல்லிசை நாடு. உவகை காண்!

இறை உணர்வு இன்பம் ஏற்றிடு - அன்றியும்
கறை அதில் மூடநம்பிக்கை தூற்றி எறிந்திடு

புதுமலர்த் தேன் நீ! மதுக்குட வழிஓடை நீ!
‘இதுதான் அழகென்று’ எவர் சொன்னார்? உனை நோக்காமல்

உருட்டும் விழி முறுக்கும் உடல் சிரிக்கும் இதழ்கள்
உருக்கும் எவரையும் உன்னைக் கண்டால்! மெய்

தொடரும்...

எழுதியவர் : agan (25-Sep-13, 12:58 pm)
பார்வை : 102

மேலே