இரசிக்கின்ற தோல்வி

உன் கண்ணீரை
வானத்திற்க்கு விற்றுவிடு
வானமாவது அழுதுபுலம்பட்டும்
பூமி சிரிக்கட்டும்!
உன் கவலையை
காற்றோடு கரைத்துவிடு
புல்லாங்குழல் இசைக்கட்டும்
குயில்கள் கேட்டு இரசிக்கட்டும்!
உன் துயரத்தை தூக்கில்போட
ஆனையிடு, கயிராவது
அறுந்து விழட்டும்
தற்கொலை குறையட்டும்!
உன் கோபத்தை தீயிடம்
கொடுத்துவிடு,தழல் திளைக்கட்டும்
தீய எண்ணங்கள் ஒழியட்டும்!
உன் சோம்பலை பூவிடம்
சேர்த்துவிடு,பூக்களாவது
மெதுவாய் பூக்கட்டும்
அழகாய் பேசட்டும்!
இதுபோல் தோல்விகளை
துலைக்காதே,துறத்தாதே
வெற்றியை அடைய
கடைசி வரை தோழ்கொடுக்கும்
தோழன் தோல்வி மட்டுமே!

எழுதியவர் : மதி (25-Sep-13, 9:45 pm)
பார்வை : 75

மேலே