+முடிதிருத்தும் நிலையம்!+
இருக்கும் பத்திரிக்கை எல்லாம்
இங்கு இலவசமாய் கிடைப்பதால்
இதுவும் இன்னொரு நூலகமே!
நமது பின்பக்கத்தை
நமக்கே காட்டும்
ஒரே இடம்!
பலரின்
'தலை'விதிகள் இங்கே
நிர்ணயிக்கப்படுவதால்
இதுவும் ஒரு நீதிமன்றமே!
நேர்த்திக்கடன் போல
தினம்தினம் இங்கே
முடிகள் தரப்படுகின்றன!
எத்தகைய தலையானாலும்
அழுக்கு தலை
குளித்த தலை
எண்ணெய்போட்ட தலை
மணக்கும் தலை
மணக்காத தலை
என எப்படி இருந்தாலும்
முகம் சுளிக்காமல்
பணி நடக்கும்!
பலர் இங்கு
தலைசீவ மட்டுமே
வருவதுண்டு!
சிலர் இங்கு
கதைக்க மட்டுமே
வருவதுண்டு!
இது ஆடவர்
அடிக்கடி ஒதுங்கும் இடமெனினும்
மங்கையருக்கோ
ஒதுக்கப்பட்ட இடம்!
அழகாக அற்புதமாக
அடர்த்தியாக உள்ளோருக்கு
முடிவெட்டப்படும் நேரத்தில்
தலையில் பாதிமுடி இல்லோதோரும்
நாலே நாலு முடி உள்ளோரும்
கேட்கும் அழகுகுறிப்புகளால்
"கொஞ்சம் பார்த்து ஸ்டைலா வெட்டுப்பா"
"இங்க கொஞ்சம் சரியா வெட்டல"
போன்ற வசனங்களால்
அடிக்கடி காமெடியும் நடக்குமிடம்!