உயிர்ப் போராட்டம்
தமிழ் மக்கள்
துயர் துடைக்க
உயிர் நீத்த
உன்னதனே...!
கோரப் பசி
அடக்கி
கோரிக்கைகள்
முன் வைத்து
ஈழ கோபுரமாய்
நின்றவனே...!
உப்பு நீர்கோட
உள்நாக்கில்
சொட்டு
விடாமல்
உயிர் போராட்டம்
நாட்டியவனே..!
ஈழ தமிழ் மக்கள்
கண்ணீர்த் துளி
துடைக்க,
உயிர்த் துளி
இறைத்தாய்
உணர்வின்று
கிடந்தாய்...!
உன்னுயிரில்
எரிந்த
தீப் போராட்டம்
இன்னுமும்
எரிகிறது
எங்கள்
இதயங்களில்..!
இன்றைக்கும்
இறையிடம்
சேராமல்
எங்கள்
இல்லங்களில்
வாழ்கிறாய்
தீபமாக
திலீபனே...!
***கே.கே.விஸ்வநாதன்****