ஜெலட்டின் பசு

வைக்கோலை மென்றுதின்று ,
உதிரம் பெற்றுப் பாலாக்கி ,
தன் கன்றுக்காகவே என்று
நினைத்துப் பால்சுரக்கும்
காரம்பசுவையும் பொய்க்
கன்றால் ஏமாற்றிக் கறந்து
தயிராக்கி நெய்யாக்கித்
தானும் உண்ணாது
பசித்த வயிறுகளைப் புறந்தள்ளியே
தீயில் சொரிந்து இறையிடம்
வரம்வேண்டும் பிரபஞ்சத்தின்
மிகச் சிறந்த படைப்பே....!
ஜெலட்டினுக்கு
வெடிக்கும் திறன்
கொடுத்த கடவுள்
நெய்க்கு எரிதிறன்
கொடுக்காமல் வெடிதிறன்
கொடுத்திருந்தால் .....!
என்றேனும் நீ..
பசு வளர்க்க
நினைத்திருப்பாயா..?
'அறிவது அறியாமை பேதமை'