உயிர் மொழி

வாய் திறந்தேன்
அமுதமாய்,
செவிக் கேட்டேன்
எனை மறந்து,
உயிரானேன்
உனை பார்த்து..!

இருதய துடிப்பு
சத்தம்
உன்னில்
நான் உருகிய
மிச்சம்..!

உன் உருவம்
பொறித்த
இடம் கண்டு
உளியில்
துளிர்த்த
சிலையானேன்...!

இனிமை வழிய
தேன் ஊற்று
ஆனது,
என் நெஞ்சத்தில்
உனை
சுமந்தால்...!

மரக்கிளை
சருகாக
இருந்தேன்
உனை பருகி
உலகறிய
கவியாக
திகழ்ந்தேன்..!

முழு மூச்சாய்
உனை சுமந்தேன்
என்னுயிர்
குருதியில்
கலந்த
எம் தமிழ் மொழியே..!!!

***கே.கே..விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (27-Sep-13, 10:06 pm)
Tanglish : uyir mozhi
பார்வை : 75

மேலே