நட்பு

இரு முகங்கள் கொண்டு ஒரு விலை பேசும்ஒற்றை
நாணயம்.....
சிலிர்காத மேகத்தை சிலிர்க்க வைத்து செல்லும்
தென்றல்.......
இமை மூடி தலை சாய நினைக்கும் இரண்டாவது
தொட்டில்......
புரியாத இருளில் புதிதாய் ஒளிதந்த
மின்மினி பூச்சி......
தவிக்கும் நடுகடல் ஓடத்தை தரைகடல் சேர்க்கும்
தண்ணிர்.......
இறுதி வரை என்னை கரைசேர்த்து கரைந்துபோகும்
காலங்கள்......
தனியாய்பேசி சிரிக்கும் மலர்களுக்கு துணையாய்
வரும் பட்டாம்பூச்சி.............
நான் எவ்வளவு எழுதினாலும் தாங்கிக்கொள்ளும்
காகிதம்............
தினமும் என் தனிமையை போக்கும் இரவின்
நிலவு........
நல்லவனாய் மாற எப்போதும் இதயம் தேடிஓடி
போகும் இரத்தம்......
புரியாத மௌனத்திற்க்கு எப்போதும் துணைபோகும்
வார்த்தைகள்......
மண்ணுக்கு சந்தனவாசம் பூசவரும் வாணத்து
மழைதுளி.............
வெயிலில் தன்காய்த்து மழையில் தன்நனைத்து
மலர்தரும் செடிகொடி......
இப்படித்தான் ஒற்றையாய் நின்று விளங்காமல்
ஒற்றை சேர்த்து பொருள் தருவதில் நட்பும் ஒன்று!

எழுதியவர் : மதி (28-Sep-13, 7:59 am)
Tanglish : natpu
பார்வை : 263

மேலே