உயிர் தங்கையே !
கண்களில் பூக்கிறது
சந்தோஷ கண்ணீர்
முகத்தில் மலருகிறது
மகிழ்ச்சிப்பூக்கள்
என் தங்கையை நான் பெற்றிட
என்ன தவம் செய்தேனோ?
இந்த தங்க தங்கையை விட
இன்னுமென்ன வரம் தேவை ?
பாசக்குழியினில் வீழ்ந்து விட்டேன்
அன்பால் ”அடி”மைப்பட்டுவிட்டேன்
மருந்தும் தேவையில்லை
மறந்தும் எழு எண்ணமில்லை.
ஆராய்ச்சி மாணவியே
நீ ஆராய்வது எது ?
இயற்பியல் தானே
உளவியல் எப்படி ?
இயற்பியல் ஆராய்ந்துக்கொண்டேயென்
இயல்பை ஆராய்ந்தது எப்படி ?
சச்னினின் விசறியென அறிந்து- கவியெனும்
ஆட்டம் ஆடி கவர்ந்துவிட்டாய்
திருப்பூர் குமரன் ! அன்று கொடி காத்தான்
கோவை மங்கை நீ! பாசக்கொடி பிடிக்கிறாய்
உடன் பிறவா தங்கையே
கள்ளமில்லா மங்கையே
பெண்மையில் வேங்கையே
ஆண் மயில் அற்புதமே !
பிறந்தநாளுக்கு கவியெழதி
வாழ்த்திய கவிதையே !
என் அருமை சுதாவே !
உன் வாழ்த்தில் மீண்டும்
பிறந்தேன் ! மகிழ்ந்தேன் !
நன்றி சொல்லிட மனமில்லை
நன்றி சொன்னால் சொந்தமில்லையாம் !
வென்றிடவே ஏங்குகிறேன் –உனை
பாசத்தால் வென்றிடவே முயலுகிறேன்.
வாழ்க நீ பல்லாண்டு !!!