லிமரைக்கூ.....!!

மனிதனுக்குச் சொந்தமானது சிரிப்பு
கவலையுறுங்கால் நகைச்சுவை கேட்க
காணாமல் போகும் கண்ணீரின் கரிப்பு ....!!

*******************************************************************

வண்டியில் செல்கையில் தேவை நிதானம்
விபத்தால் மூளைச் சாவு ஏற்பட்டால்
தவறாமல் செய்ய வேண்டும் உதானம் ....!!

********************************************************************

மலைக்கு அழகே அடர்ந்த காடு
மனசாட்சியின்றி இயற்கையை சிதைக்க
மழையின்றி வளம்குறையும் நாடு ....!!

*******************************************************************

போதையின் பாதையில் மனிதனின் ஓட்டம்
கட்டுக் கடங்கா விட்டால்
நின்றிடுமே மூச்சின் ஒட்டம் ......!!

*******************************************************************

பதவி வந்தால் வேண்டுமே பணிவு
பாதகச் செயல்களுக்கு துணை போகாமல்
கொடுமைகண்டு கொதித்தெழ தேவை துணிவு !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Sep-13, 11:02 am)
பார்வை : 63

மேலே