இலையுதிர்காலம்
வசந்த காலத்தில்
பச்சை வண்ணத்தில்
நின்றிருந்தது -ஒரு மரம்.
பசுமையான நினைவுகளுடன்
மரமும் இலையும்
இணைந்தேயிருக்க....
மரம் நழுவி செல்லும்
ஓர் இலைக்கு தெரியாது
இலையுதிர்காலம் என்று …..
காலங்கள் கடந்து நிற்க
இலையின் தழும்புகள் எஞ்சி நிற்க
மரம் அது மாறிப்போனது
பச்சை நிறமாய் - மறுபடியும் .
ஆனால்
நிறம் மாறிப்போன
இலையின் நினைவுகள் பசுமை
சருகாய் போன இலையும்
உரமாய் போகிறது மண்ணில் ....
அந்த மரத்திற்காக ...
# குமார்ஸ் ......