அடங்கவில்லை...!

சீறும் சிங்கத்தின் சத்தம் கூட
சிறிது நேரம் அடங்கும்...!
கூவும் குயிலின் இசை கூட
இடையில் அடங்கும்...!
கரையும் காகம் கூட
காலைப்பொழுதோடு அடங்கும்...!
உன் நினைவால் என் உள்ளத்தில் எப்போதும்
அலைகள் அடங்காமல்
அலை பாய்ந்து கொண்டே இருக்கிறதடி...!