பசுமை

ஏர் உழுத நிலத்தின் மேல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் !!!
மனித குலத்தின்
அழிவை நெருங்கி கொண்டு இருக்கிறோம் !!


உண்டி இன்றி ஒருநாளும்
வாழமுடியாது !!!
மனிதா நீ கல் உண்ணும்
வெகு தூரமில்லை !!!

பச்சை நிலத்தை எல்லாம் பாலைவனம் ஆகினாய் ,
கேட்டால் வளர்ச்சி என்றாய் !!
உன் விஞ்சான வளர்ச்சி
எம் மனித குலத்தின் வீழ்ச்சி !!

பணமே வாழ்கை என்றாய்
பசுமையை மறந்து போனாய் !!
எதிர்காலத்தில் புனல் இன்றி கனலோடு வாழ்வாய்

நிகழ்காலம் மட்டும் யோசித்தாய்
எதிர்காலம் மறைந்துபோனாய் !!
ஆங்கிலமே அறிவு என்றாய்
அவ்வை மொழி (அட்திசூடி) மறந்து போனாய்!

கண் பார்க்கும் இடம் எல்லாம்
கற்வீடுகள்!!
உயிர் கேட்கும் காற்றை
அவை தந்திடுமோ ???

மரம் வெட்டும் வேலையை
விட்டுவிடு !!
வருங்கால சந்ததிகாக
இதை விட்டுகொடு !!!

எழுதியவர் : கணேஷ் (1-Oct-13, 12:50 am)
சேர்த்தது : கணேஷ்
Tanglish : pasumai
பார்வை : 180

மேலே