முத்திரைத் துளிகள்
''எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ''
என்பார் கொன்றை வேந்தனில் அவ்வையார்.
எண்கள் தமிழில் கண்களைப் போன்றவை அதனால் தான் பாடினார்.
ஒவ்வொரு எண்ணும் மதிப்புமிக்கது ..அதனால்தான் ஆசிரியர் தேர்வுத் தாளில் தரும் எண்களுக்கு மதிப்பெண்கள் என்று போற்றிப் புகழ்கின்றோம்.இதனால் ஒவ்வொரு எண்ணும் மதிப்பு மிக்கதே.
எண்களில் பத்து என்கிற எண் மிகவும் சிறப்பானது அதனால்தான் ''அர்ச்சுனன் பேர் பத்து ''என்று அவன் ஆற்றலையும் வலிமையையும் உணர்த்திற்று .
''பசி வந்திட பத்தும் பறந்து போகும்' என்பது சான்றோர் வாக்கு .அந்த பத்து தான் .....
சத்தியம் ,அகிம்சை,புலனடக்கம் கொல்லாமை,வெறுக்காமை ,சுத்தம், நிறைவு,தவம்,
கல்வி,தியானம் ஆகும் .
''பகுத்து ஆராயப்படாத வாழ்க்கை தகுதியானதல்ல ''என்பார் சாக்ரடீஸ் ..
ஆம்! வாழ்க்கை ஒவ்வொரு கணமும் மதிப்புமிக்கதுதான். கடிகாரச் சத்தத்தை நீங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது நேரம் உங்களுக்கு எதிராகச் செயல் படுவதை மாற்றி அதை உங்களுக்காக வேலை செய்ய வைக்கலாம். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது...பத்து விடயங்கள் நமக்கு முத்திரைகள் ....
1. நிகழ் காலத்தில் வாழுங்கள்
2. உங்கள் நடவடிக்கையின் மதிப்பை நிர்ணயுங்கள்
3. தினசரி வேலைகளை அட்டவணைப் படுத்துங்கள்
4. உங்கள் வேலைகளை முன்னுரிமைப் படுத்துங்கள்
5. நேரத்தைப் பயன் விளைவிக்கும் வகையில் மாற்றுங்கள்
6.பிறர் உங்கள் அட்டவனையை தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்
7. சாமர்த்தியமாக வேலை செய்யுங்கள்
8. நேரத்தை வீணடிப்பவற்றை அடையாளம் காணுங்கள்
9. பணி மீது கவனம் செலுத்துங்கள்
10. இப்போதே செய்யுங்கள்
''மரணமே
நீ வந்தால்
பத்தாம் தேதிக்குள் வந்து விடு
மாதக் கடைசியில்
வந்து தொலையாதே ''
நன்றி ஐயா
பேராசிரியர் க ராமச்சந்திரன்