மாக்கள் வாழும் உலகம்

கண்ணில்லா மாக்கள்
வாழும் உலகமடா இது .....

இன்னும் எத்தனை
கண்ணீர் மழையை
பொழிந்தாலும்.....
கல் கூட உருகும்...

சில கண்ணுள்ள மாக்களின்
உள்ளம் உருகாது...

மெழுகுவர்த்தி கூட
தான் உருகுகையில்..
தன்னால் உண்டான
வெளிச்சத்தை
பிறருக்கு தந்து விட்டு தான் போகும்....

இதில் அந்த ...
வெளிச்சத்தை கண்டு
சந்தோஷ படுபவர்கள் எத்தனை பேரோ...

அந்த
மெழுகுவர்த்திக்காக
உருகுபவர்கள் எத்தனை பேரோ....

பாவம்..
இப்பேதையின் மனமோ...
மெழுகுவர்த்தியை போல்
உருகுவதுடன் மட்டுமல்லாமல்...
தன்னால் உண்டான
வெப்பத்தை கூட ,
அறிந்தும், உணர முடியா
பேதையாகிறாள்....

கண்ணில்லா மானுட
மாக்கள் வாழும் உலகில்.....
கண்ணீர் மழை பொழிந்தால் என்ன,
கண்களோடு இருந்தால் தான் என்ன பயன்...

என்றும் அன்புடன்
பிரபா

எழுதியவர் : மலர் பிரபா (1-Oct-13, 7:21 pm)
சேர்த்தது : MalarSmani
பார்வை : 79

மேலே