நம் தேசத் தந்தையை மறக்காதே
காந்தி ஜெயந்தி :
அழகான குழந்தையின் சிரிப்பை சிதைத்துவிடாதே...
அகிம்சை வழி நடத்திய காந்தியடிகளை மறந்துவிடாதே..!
ஆனந்தமாக வாழும் குடும்பத்தை பிரித்துவிடாதே...
ஆங்கிலேயரை எதிர்த்த காந்தியை மறந்துவிடாதே..!
சுத்தமான இடத்தை அசுத்தம் செய்யாதே...
சுதந்திரத்திற்கு போராடிய காந்தியை மறந்துவிடாதே..! பிறர்
உள்ளத்தின் மகிழ்ச்சியை அழிக்க நினைக்காதே...
உப்புச்சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றிய
காந்தியை மறந்துவிடாதே..!