[517] காந்தி வாழ்க்கை,நம் வழி,ந டத்தும்!
நம்மை,நாம் ஆளும் போது,
==நமக்கது சுதந்தி ரம்,ஆம்!
நம்மை,நாம் ஆள, என்றால்
==நம்,சுயக் கட்டுப் பாடாம்!
செம்மையாம் சமூகம் வேண்டின்,
==சிறுசிறு கிராமம் கூடத்
தம்,நிறை வோடும் வாழும்
==தகுதியைக் கொள்ள வேண்டும்!............... [1]
தம்முடைத் தேவை கட்குத்
==தமக்குளே தீர்வு வேண்டும்!
எம்மலை முகடும் கீழே
==இருப்பன தாங்க நிற்கும்!
அம்முறை நமக்(கு)ஆ காது!
==அடித்தள மக்கள் கூடத்
தெம்புடன் வாழத் தக்கத்
==திறமையில் உயர வேண்டும்!................... [2]
உழைப்பினில் எளிமை போற்றி,
==உயர்வினில் எளிமை தள்ளித்
தழைத்தெழும் பேதம் போக்கித் ,
==தம்முளே பிரிவு நீக்கி,
இளைத்தவர் என்ப தில்லா(து)
==இடை,நிலைச் சுரண்டல் போக்கிக்
குளத்து,மீன் போல்,ச மூகக்
==குறைகளைக் களைந்து வாழ்வோம்!............. [3]
சத்துவம் என்ற பேரில்,
==சமத்துவம் கெடாது காப்போம்!
ஒத்துயிர் எல்லாம் வாழ
==ஒருவழி கண்டு செய்வோம்!
இத்தரை கொடுக்கும் ஏதும்
==இயற்கையின் கொடையே! நம்முள்
பித்தராய்ச் சண்டை போடும்
==பிணக்குகள் தவிர்த்து வாழ்வோம்!....................[4]
உழவொரு தொழிலும் இல்லை;
==உலகினர் புரந்து காக்கும்
தொழுவதற் கான செய்கை!
==தூய்மையின் நிறைந்த சேவை!
மழையும், இப் பூமி தாமும்
==மறுத்திடாக் கொடையை எண்ணிப்
பிழையிலா(து) உழவர் காப்போம்!
==பெருகிடும் நன்மை சேர்ப்போம்!...................... [5]
விளைச்சலைப் பெருக்கி நிற்போம்!
==விருப்புகள் குறைத்து வாழ்வோம்!
உளைச்சலும், துயரும் கூட்டும்
==உன்மத்தம் அழித்து,உ யர்வோம்!;
தளர்ச்சியைக் கொடுக்கும் சாதி,
==மதமோடு மொழியை வைத்துக்
கிளர்ச்சிகள் செய்தி டாமல்
==கேண்மையை வளர்த்து வாழ்வோம்! ........... [6]
எண்ணமும், செயலும், சொல்லும்
==என்றுமே ஒன்றாய்க் கூட்டி
வண்ண,நம் கொடியின் கீழே
==வளர்ந்திடும் தேசி யத்தால்
திண்ணாமாய் வாழ்வோம்! நோக்கும்
==திசையெலாம் பார தத்தின்
வண்ணமாய் ஒளிர்வோம்! காந்தி
==வாழ்க்கை,நம் வழி,ந டத்தும்! .................... [7]