ஒரு வார்த்தை-ஆயிரம் அர்த்தங்கள்
(குறிப்பு-9-ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் பிறந்த ஹைக்கூ கவிதைகள் நாம் நிறையப் பார்த்துவிட்டோம் இங்கே நவீன ஹைக்கூ கவிதைகள் பற்றி....)
ஹைக்கூ கவிதைகள் எதையும் சுருங்க சொல்வதிலும் அனைத்தையும் இயற்கையின் குறீயீடாகச் சொல்லியும் எதையும் முழுமையாகச் சொல்லாமல் நமது கருத்துக்கும் ஊகத்துக்கும் விட்டுவிடும்....
இங்கே நான் ஒரு ஹைக்கூ கவிதையைப் படிக்கும் போது என் மன நிலை என்ன்னவோ அதற்குத் தகுந்த கருத்தே அப்போது தோன்றும் அதுவும் நிலையானது அல்ல...மீண்டும் நான் இன்னொரு சூழலில் அதே ஹைக்கூ கவிதையைப் படித்தால் .........இன்னொரு கருத்து தோன்றும்
இங்கே நான் எனது கருத்தை எழுதி உள்ளேன்...அதுவே உங்களுக்கும் சரி என்று தோன்றினாலும் தோன்றும் இல்லை என்றும் தோன்றலாம்
குளிர்ச்சி நிறைந்த
ஆறு மாத காலி வானம்......
குயிலின் அழுகை
.........................மாசாஒகா ஷிகி(1867-1902)
இங்கே கவிஞர் மழையில்லாத வரட்சியைக் காலிவானம் என்றும் அதே நேரம் மழை வருவது போல் பாசாங்கு காட்சியைக் குளிர்ச்சி நிறைந்த என்றும் குயிலின் சோகப் பாடலை.அழுகை என்றும் இயற்கையைச் சொல்வது போல் நமக்குத் தெரிந்தாலும் இது வாழ்க்கையின் குறீயீடு.........எல்லாம் நன்றாக நடப்பது போல் தெரியும் ஆனால் எதுவும் நடக்காது அப்போது நம் இதயம் நோகும்
************************************************************
அல்லி-
தண்ணீருக்கு வெளியே...
தன்னிலைக்கு வெளியே
.....................நிக் விர்கிலியோ-Nick Virgilio (1928-1989)
இங்கே கவிஞர் தண்ணீருக்கு வெளியே கிடக்கும் அல்லி மலரை குறீயீடாக...அதே நேரம் வாழ்வின் தத்துவமாக......அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இல்லையேல் இல்லையே வாழ்வில் எதுவும் என்று.
*****************************************************************
தரை அணில்
தக்காளியுடன் தள்ளாடுது
தோட்டத்து வேலி மீது....
....................................டான் எலுரெட்-Don Eulert (1933-)
ஆமாம்..அது மர அணிலாக இருந்தால் தக்காளி என்ன? பூசணிக்காயைக் கூட எளிதாக எடுத்துக்கொண்டு ஓடும்...அவரவர் தகுதி மறந்தால் இதுதான் நிலைமையோ...?
****************************************************************
என் காலணியில் பனி
உதறித்தள்ளிய
குருவி கூடு
................................Jack Kerouac (1922-1969)
இங்கே கவிஞர்........ஒரு கட்டுக்கோப்பு கலைந்த பின் வாழ்வில் உள்ள கேடுகெட்ட நிலையை எடுத்துரைக்கின்றார்
**************************************************************
இப்பொழுதுதான் நண்பர்கள்
அவன் உற்றுப் பார்க்கிறான்
பறக்கும் என் ஆடையை.....
...................அலெசிஸ் ரோடெல்லா (Alexis Rotella)
இங்கே கவிதாயினியோ...நண்பர்கள் என்ற போர்வையில் காமம் கொள்பவனைக் காட்சிப்படுத்துகிறாரா?...ஆதலால் காதல் செய்வீர்...?
************************************************************
விண்கற்கள் பொழிவு
ஒரு மென்மையான அலை
பாதச்சுவடுகளை ஈரமாக்குகின்றன
...........................Michael Dylan Welch (1962- )
இங்கே கவிஞர் வாழ்வின் நிதர்சனத்தைச் சொல்கிறார்.....எவ்வளவு கொடுந்துயரிலும் ஆதரவான வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும் என்பதைச் சூடான விண்கற்கள் மழையாகப் பொழியும் போதும் நடந்து செல்லும் பாதங்களை ஈர அலைகள் சுகமாக்கிவிடும் என்று.
கவிஞர்களே! கவிஞர்களே! இது மின்னல் வேக உலகம்...உங்கள் பார்வையில் படும் காட்சிகளை 1-2-3 வரிகளில் எழுதி வையுங்கள்...அர்த்தங்கள் அதை நேசிப்பவர்கள் அறிவார்கள் உங்கள் ஒரு வரத்தை ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்