சிசு வனத்தில் ஒரு சிறுவன் அழுகிறான்

தாயே !
எங்களின் தெய்வமே
இருள் சூழ்ந்த இதயங்களின் தீபமே
அனைந்து விட்டாயா?

நான் பிச்சை எடுத்த வயதில்
சிசு வனத்திற்கு அளித்து வந்தாய்
என்னை போன்றார் பலர் உன்னைச்சுற்றி ...

எச்சில் மிச்சங்களை எங்கள் மீது வீசி
எறிந்துவிட்டு தானம் செய்து விட்டதாக
பெருமிதம் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில்

''என் விரல் பிடித்துக்கொள் '' என்று
உன் சுண்டு விரல் நீட்டினாய்
சிசு வனம் வரை உன்னை
பிடித்துக்கொண்டு நடந்தேன்

இன்று உன்னை நேசிக்கும் பலர்
என்னைத் தேடி வருகின்றனர்
என் விரல்களைத் தொட்டுப்பார்த்து
அழுகின்றனர் ...

''தாயே''
நீ உட்டிய சோறு இன்னும்
சுவையாக இருக்கின்றது
என் நினைவுகளில்,,,

அடே இறைவா! இயற்கையின்
எச்சமே.. எங்களுக்கு சோறு
ஊட்டிய கைகள் எங்கே?

தள்ளாத வயதிலும்
என்னை மருத்துவ மனைக்கு
தூக்கி ஓடிய கால்கள் எங்கே ?

சொர்க்கம் எதுதான் என்று
தெரியாத வயதில்
அவர் மடியில் கண் அயர்ந்த
நாட்கள் எங்கே?

அனைத்தையும் நினைத்து பார்க்கின்ற போது
என் இதயத்தில் நிரம்பி வழியும் கண்ணீரில்
தாகம் தீர்த்துக் கொள்கிறது என் வயிறு
தாயே!
ஆனந்தத்தில் என்னை
அதிகம் அழவைதவளே ...
எப்போது நீ எங்கிருக்கிறாய்
உனது புன்னகை
பார்க்க வேண்டும் எனக்கு

ஒரு கருவைக்கூட உன் வயிற்றில்
சுமக்காமல் இன்று
கோடிக் குழந்தைகளை தாயில்லாப்
பில்லைகலாக்கிட்டாயே
'தாயே"
உனக்கு மறு பிறவி என்டு ஒன்று இருந்தால்
நான் மீண்டும் இந்தப் பாலாய்ப்போன
பூமியில் வந்து பிறக்க வேண்டும் ..
''அனாதையாய்"

எழுதியவர் : (3-Oct-13, 3:54 pm)
சேர்த்தது : suguna
பார்வை : 75

மேலே