அதிகாலை காதல்
ஆதவன் துயில் எழ தயாராகி நிற்க
உந்தன் நினைவோ
என்னை துளைத்துக் கொண்டிருக்க
உன் பெயரோ மகரந்த பூக்கள் மேல் மயில்
அமைந்தாற் போல் அழகை விளக்கி நிற்க
உன் நினைவுகள்
கிணற்றில் போட்ட கல்போல
நிலையாய் நிற்க
பூக்கள் பூக்கும் ஓசை கேட்ட எனக்கு
உன் சம்மத ஓசையோ கேட்கவில்லை ஏன் ?
உன் பெயர்த் திங்கள் பேரின்பம் கொடுத்த எனக்கு
உன் மொழி இன்பம் கொடுப்பாயா !
தனிமைச் சிறைக்கே கவிதை என்றல்
உந்தன் சிறைக்குள் இருந்தால்
பெண் மனம் போல் தான்!
பச்சைப் புல்லும் உன் பாதம் பட
தவம் புரிய வேண்டும் !
களவு இனமும் கனவு கண்டு தேவதை நீ !
உன் இதழ் பட
என் உடலின் பாகங்கள்
கண்ணீர்த் திவலையில் மிதக்கின்றன !
பெண்ணின் மன ஆழம் கண்ட எனக்கு
உன் மௌனம் கூட எனக்கு சங்கீதம் தான் !