கடிகாரம்
நொடி முள் , ஏழை போல்
அதிகம் உழைப்பவன்..
பெரிய முள் , நடுத்தர வர்க்கம்
பார்த்தப் பார்த்து நகருவான்..
சின்ன முள் , இவர்கள் உழைப்பை
மொத்தமாய் பயன்கொள்ளும் முதலாளி...
எத்தனை ஏற்றதாழ்வுகள் !!
நீ எங்களுக்கு உதாரணமா
இல்லை நாங்கள் உனக்கா...
இருந்தாலும் ,
எங்கள் இதயம் போல் அல்லாமல்
அனைவருக்கும் ஒரே மாதிரித் துடிப்பவன் ...
கடிகாரமே!!உனக்கு ஒரேயொரு வேண்டுகோள்!!!
மனிதரை யாரோ உனக்குள் கட்டிவைத்து விட்டனர்
உன் முட்களை சில மணித்துளிகளாவது முடக்கிப்போடு
உலகம் கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்கட்டும் ...........