விவரிக்க முடியாத வலி
அவளுக்காக
கவிதை எழுத நினைத்து...
குப்பைமேடாய் போன
என் வீட்டு அறை...
தன் உதிரத்தை
வீணாக உதிர்த்த
என் எழுதுகோல்...
அழகான வரிகளை
தேடித்தேடி களைத்துப்போன
என் நினைவுகள்...
இறுதியில் தோற்றுப்போன
என் எண்ணம்...
இவைகளுக்குத்தான்
தெரியும்...
அவள்மீதுள்ள
என் காதல் என்னவென்று...