வள்ளிக்கு ஒரு பாட்டு ....!!

குறவர் குடியில் வளர்ந்தவளாம்
தினைப்புனம் காக்கச் சென்றனளாம்
வேடனாய் வேலனைக் கண்டனளாம்
இவனோ வேடனென மலைத்தாளாம் ....!!
நம்பிராசன் அவ்விடம் வந்திட
வேலன் வேங்கையாக வியந்தனளாம்
கிழவனை மணக்க மறுத்தாளாம்
ஆனைமுகனே யானையாய்வர மருண்டாளாம் ...!!
வேலவன் சுயரூபம் காட்டிடவே
ஆனந்த வெள்ளத்தில் திளைத்தனளாம்
மான்வயிற்றில் உதித்த மங்கையிவள்
முருகனுடன் மணக்கோலம் கொண்டாளாம்....!!
விஷ்ணுவின் மகளுள் சுந்தரவல்லியே
வள்ளியாய்ப் பிறந்த இச்சாசக்தியாம்
முருகனின் வலப்பக்கம் இருப்பாளாம்
வழிபட இகலோகத்தில் காப்பாளாம்....!!!