இயற்கையிடம் கற்போம்

இறைவன் தன அன்பையே வெளிப்படுத்த
மனிதனின் தேவையை நிறைவேற்ற
இயற்கையை படைத்திட்டார் சிறப்புடனே

இயற்கையின் அழகில் ம்யங்காதோர் எவருமில்லை பூமியிலே
இந்தப் படைப்பதை பார்க்கையிலே
இன்பம் பெருகுது ம்னசினிலே

வான்வெளியும், காற்றும், புல்வெளியும்
எண்ணிலடங்கா ஆறுகளும்,
எல்லையில்லா கடல்வழியும்,
சிலிர்த்திட வைக்கும் பனித்துளியும்,
உயிர்த்திட வைக்கும் மழைத்துளியும்

அத்தனையும் உணடு உலகினிலே
அன்பாம் இறைவனின் படைப்புகளாய்
-- இயற்கை என்ற ஓரினமாய்

எண்ணிட எண்ணிட விந்தையே
இயற்கையே ஒரு விந்தையே!

நீலவானில் தவழும் விண்மீன்கள்
நீலக்கடல் தனில் துள்ளும் மீன் இனங்கள்
கண்ணுக்கினிதாய் பசும் மலைகள்
வண்ணமிக்கதாய் பூச்சியினங்கள்
குட்டை நெட்டையாய் பல மரங்கள்
குறுக்கும் நெடுக்குமாய் விலங்கினங்கள்

அத்தனையும் உணடு உலகினிலே
அன்பாம் இறைவனின் படைப்புகளாய்
-- இயற்கை என்ற ஓரினமாய்

இயற்கைக்குள் எந்த பேதமில்லை - எனவே
இவற்றுள் வாதமில்லை
இயற்கையிடம் நாம் கற்போமே
ஒற்றுமை உணர்வுடன் நடப்போமே
பெரியோர் சிறியோர் குழந்தைகளாய்
மகிழ்வுடன் வாழ்வோம் மானுடராய்

எழுதியவர் : பியூலா (8-Oct-13, 8:20 pm)
சேர்த்தது : beulah esther rani d
Tanglish : iyarkaiyidam karpom
பார்வை : 92

மேலே