பருவ வாழ்க்கை
பருவ வாழ்க்கை
பால்ய பருவத்தில்.............
இதய ஓரத்தில்
சிறு வருடல்.....
ம்...ம்.. நடந்து
அளுத்துப் போன பாதங்கள்
மிதி வண்டிக்கு ஏங்கின.....
தண்ணீரை சுவைத்த நா
சுவை நீருக்கு ஏங்கின....
பள்ளி பருவத்தில்....
அழகான டீச்சரைப் பார்த்து
ஆனந்த பட்ட கண்கள்...
மிரட்டும் ஆசானை கண்டு
மிரண்டு போயின..
தேர்ச்சி அறிக்கை வந்தால்
வயிற்றில் சுனாமி அலை
சுற்றி வட்டம் போடும்..
வீட்டிற்கு எடுத்து வரும் வேளை
விட்டில் பூச்சி
விலாசம் கேட்கும்...பாவம்
நீயும் என்னைபோல்
சுட்டெரிக்கப் படுவாய்.....
இளைய பருவத்தில்.............
நெஞ்சில் வண்ணத்துப்பூச்சி
வட்டமிடும்..
கண்கள் எதையோ
தேடிக்கொண்டே இருக்கும்..
அம்மா அசிங்கமாக தெரிவார்...
அப்பா வில்லனாக உருமாறுவார்...
அவளோ.....
தேவதையாக...
இதய ராணியாக..
கனவு கன்னியாக.....
ஏன்....இனி
உயிராக காட்சியளிப்பாள்
நீயோ..
உருக்குலைந்து போவாய்.....