என்று வருமடா மானிட ஞானம்.?
சூளுரைத்து தேர்தலில் இங்கே
அரசியல் வளர்க்கும்
வெறும் சொற்களம்
நெற்களமெல்லாம் மாறி இங்கே
கட்டிடங்கள் வளர்ந்திட அமைக்கும்
அத்திவார அடித் தளம்
கனவு இல்லத்தில் அமர்ந்து
கல்லையும் மண்ணையுமா தின்னும்
மனித சனம் ?
பாவம் பசிபட்டினியில் தினமும்
இங்கே செத்து மடியுதடா
ஏழை சனம்
மனிதனுக்கு இங்கே எப்பொழுது
வரப்போகுதடா மனித பிரக்ஞை
மானுட ஞானம் ?
~~~கல்பனா பாரதி~~~