போட்டி மிகுந்த போட்டி

போட்டி ஒரு தவக்கம்
அது முடிவல்ல
இன்று வென்றவன்
நாளை தோற்பான்
இன்று தோற்றவன்
நாளை வெல்வான்
எது உறுதி ?


போட்டி ஒரு சுவாரசியம்
என்று கொள்வர்
போட்டி ஒரு வன்முறை
என்று கொள்வேன் நான்


போட்டி வேகத்தைத் தூண்டி
வெறியாக மாற்றி
கலகத்தை உண்டாக்கி
நிதானத்தை இழக்க முயலும்..

தேர்வுகள் தேர்ச்சிகள்
சிக்கல் பயக்கும்
நல்ல தீர்ப்புக்கள்
நயம் பயக்கும்
என்னுடைய உணவு
இன்னொருவனுக்கு விஷம்..

ஆகின்
சீர்தூக்கி கணிப்பதே
வாழ்வின் மேன்மை
போட்டி அல்ல..

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (9-Oct-13, 10:22 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 42

மேலே