அன்பு தோழர் குமரிப்பையன் அவர்களுக்கு

அன்பு தோழர் குமரிப்பையனுக்கு...

ஒரு தாய் வயிற்றில்
பிறக்காத இரட்டை குழந்தைகள்
நீயும் நானும்...!

கருத்து மலையும்
கவி மழையும்
சங்கமிக்கும்
எழுத்து தளம்
நமக்கு முகவரி...!

ஊக்கத்தை கொடுத்து
துக்கத்தை களைந்தாய்
எனக்கு கிடைத்த
இன்னொரு ஆன்மா நீ...!

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேச மாட்டாய்
சொல்லும் செயலும்
உன்னிடம் ஓரணியில் பயணிக்கும்...!

தோள் கொடுக்கும்
தோழனும் நீ
தேள் கொடுக்கு போன்றோரை
தோலுரிக்கும் தோழனும் நீ...!

எல்லோரும் நட்பால் உன் அணி
எப்பொழுதும் நீ முன்னனி
வாழ்க நீ பல்லாண்டு
வளர்க உன் கவி தொண்டு....!

(அன்பு தோழர்களே இந்த படைப்புக்கு புள்ளிகள் இட வேண்டாம்)

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (10-Oct-13, 1:58 pm)
பார்வை : 238

மேலே