மென்மையான இனிமையான கிறுக்கல்கள்
நான் சொல்வது
வண்ணக் கிறுக்கல்கள்
வானவில் சிதறல்கள்
நெளிந்து செல்லும்
நதியலைகள்
தென்றலின் தழுவல்
வளைந்து நிற்கும்
மலர்க் கொடிகள்...
கவிதையென்று நீங்கள்
அதைச் சொன்னால்
அது உங்கள் பெருந்த்தன்மை
எனக்கு அவை
மென்மையான இனிமையான கிறுக்கல்கள் !
~~~கல்பனா பாரதி~~~