அசைன்மெண்ட்

அசைன்மெண்ட்

"இன்னைக்கு எப்பிடியாவுது அந்த ராகவனை முடிச்சிவுடானும்"என்றான் பெருமாள்
"ஆமா ! இதோட மூணு தடவ முயற்சி பண்ணியும் அவன் தப்பிச்சிடாண். இன்னைக்கு விட கூடாது" என்றான் ராபெர்ட்
"என்ன பண்றாது! ஓவ்வொரு தடவையும் எதவுது தடங்கல் வந்திருது"
"இவன இதுக்கு மேல விட்ட நாம நிம்மதியா இருக்க முடியாது, தலைவர் வேற இவன் அசைன்மெண்ட் முடியாததால் ரொம்ப கோவம இருக்கரு,அவர் முகத்திலே முழிக்க முடியால"
"கவலைய விடு! இன்னைக்கு கண்டிப்பா முடிச்சிறலாம்"
"சரி! அதோ ஒரு வண்டி வருது பார்,அவன் வண்டியா பாரு"
ஜீப் பக்கத்தில் வந்தவுடன் வண்டியை குறுக்கில் விட்டேன்
அதிர்ச்சியுடன் வண்டி நிறுத்தியவான் முன்பு துப்பக்கியை நிட்டினேன்.
"ராகவா ! உன் தொல்லை அதிமா ஆயிடுச்சி ,போய் சேர்" என்று அவன் நெற்றில் சுட்டேன்.
"சீக்கரம்! வண்டிய எடு" என்று வேகமாக அங்கிருந்து கிளம்பினோம்.
"தலைவர்கிட்ட சொல்லிற்லாம" என்று ராபெர்ட் வண்டியை நிறுத்தினான்.
"சார்! ராகவனை முடிச்சிடோம்"
"நல்லது! இந்த ரௌடியையும் உங்க டீம் என்கௌன்டெர் பண்னிட்டிங்க,இனிமே அந்த ஏரியால எந்த பிரச்சினையும் இருக்காது,நாளைக்கு நீங்களும் சப்-இன்ஸ்பெக்டார் ராபெர்ட்ம் என்னை ஆபிஸ்லே வந்து பாருங்க" என்றார் மறுமுனையில் காவல்துறை தலைவர்

எழுதியவர் : Raajesh (11-Oct-13, 11:05 pm)
பார்வை : 147

மேலே