நவில்கிறேன் நன்றிதனை நானும்

இன்று என் பிறந்த நாள் என அறிந்த பலரும்
ஒரு வாரம் முன்னேயும் அதன் தொடர்ச்சியாய்
இன்றும் , மின்னஞ்சல் , குறுந்தகவல் , கவிதைகள் ,
முகநூல் மூலமாகவும் என்னையே அறியாத பலர்
பிறந்த நாள் வாழ்த்துகளை அன்புடனும் பண்புடனும் நெஞ்சம் நிறைந்தும் அழகுத் தமிழாலும் , அருமை வார்த்தைகளாலும் , எனக்கு பிறந்த நாள் மாலையாக சூடிய என் அன்பு உள்ளங்களுக்கும , உடன் பிறவா சகோதர
சகோதரிகளுக்கும் , எழுத்து தள இரத்த நாளங்களுக்கும் நட்பு வட்டத்திற்கும் என் இதயம் கனிந்த , உள்ள நெகிழ்வுடன் உளமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் .

இதனையே என் தனிப்பட்ட விடுகையாக அனைவரும் எடுத்து என்னை மேலும் ஊக்கமளிக்கவும் உணர்வினை ஊட்டிடவும் அன்புடன் வேண்டுகிறேன் .

என்றும் மறவாத
உங்கள் நண்பன் ,
உங்கள் சகோதரன்

பழனி குமார்
சென்னை
12.10.2013

எழுதியவர் : பழனி குமார் (12-Oct-13, 7:40 am)
பார்வை : 168

மேலே