அழகான நாளுக்காக

உனக்கு என்னிடம் பேச எதுவும் இல்லை என்றாலும், எனக்கு அதிகமாய் இருக்கிறது உன்னிடம் சொல்ல ஆசைப்பட்டவைகள்!

வார்த்தைகளை கொன்று தீர்க்கும் உன் பார்வைகளை இத்துடன் நிறுத்தி கொள்.

சொல்ல கிடைத்த வாய்ப்புகளோடு மெளனம் விளையாட அமைதியை பரிசாக்கி கடந்து செல்கிறேன்.

இறுதி வாய்பொன்று கிடைத்தாலும் நீயாக பேசிடும் வரை மெளனங்களை மட்டும் தான் பரிசாக்க முடியும்.

நிலை அறிந்து புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையில் மட்டுமே இருக்கும் நிமிடங்களை நகர்த்தி கொண்டு இருக்கிறேன்.

இறுதி வரை மன போராட்டங்களை என்னுள் மட்டுமே புதைக்க செய்து விடாதே!

இன்று என்னிடம் பேசிடுவாய், நாளை என்னிடம் பேசிடுவாய் என நாட்களை மட்டும் நகர்த்தி கொண்டு இருக்கிறேன்.

நானாக துவங்கி வைத்தவைகளையும் முடித்து வைக்க நீ கொள்ளும் ஆசைகள் என்னை கொன்று புதைத்து கொண்டு தான் இருக்கிறது.

நீயாக அறிந்து கொள்வாய் என அனைத்தையும் தாங்கி கொண்டு நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்.... அந்த அழகான நாளுக்காக!!

எழுதியவர் : மலர் (12-Oct-13, 12:05 pm)
பார்வை : 118

மேலே